மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும்…பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்!

Published by
பாலா கலியமூர்த்தி

2006 முதல் 2011 வரை கனிமவளத் துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடியும் அவரின் மகன் கெளதம சிகாமணியும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்  சோதனைக்கு பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 7 மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சர் பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது.

இந்த சூழல், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் 30ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியிருந்தது. அதுமட்டுமில்லாமல், மணல் குவாரி விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 10 பேருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறையினர் பல்வேறு தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர்.

போராடும் விவசாயிகள், பொதுமக்களை கைது செய்வதா? – வானதி சீனிவாசன்

இந்த சோதனையை தொடர்ந்து, தமிழக நீர்வளத்துறை பதிலளிக்கவும், குறிப்பிட்ட 10 மாவட்ட ஆட்சியர்கள் பதில் கூறவும் அமலாகித்துறை சம்மன் அனுப்பியது. இந்த சோதனையில் கோடிக்கணக்கில் ரொக்க பணம், 1000 கிராம் அளவில் தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த சமயத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மணல் எடுக்கும் விவகாரம் என்பது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் கீழ் வராது. அமலாக்கத்துறை தங்கள் வரம்பை மீறி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது  அரசு கூறியது.

சும்மா வசனம் பேசினால் மட்டும் போதாது…பீகாரைப் போலவே தமிழ்நாட்டிலும்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!

இந்த நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும். ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் திமுக அரசின் இந்த கோழைத்தனமான நடவடிக்கை, ஆட்சிக்கு வந்த நாள் முதல் நமது மாநிலத்தின் வளங்களை சுரண்டிய குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற திமுகவின் நடுக்கத்தைத்தான் உணர்த்துகிறது.

மணல் குவாரி முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை விசாரிக்காமல் தடுக்க, திமுக அரசு முயற்சிப்பது ஏன்? கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக, வேண்டுமென்றே அரசுக்கு ஏற்படுத்திய இழப்பு, அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகிவிடும் என்று ஊழல் திமுக அரசு பயப்படுகிறதா? என்றும் கேட்டுள்ளார்.

Recent Posts

இன்று ஜி20 மாநாடு..! பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…

28 mins ago

Live : மணிப்பூர் கலவரம் முதல்…பிரேசில் சென்றடைந்த பிரதமர் மோடி வரை…!

சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…

1 hour ago

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு!!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…

2 hours ago

பார்டர் கவாஸ்கர் டிராபி : ‘இந்தியா ஜெயிக்கிறது கடினம் தான்’ …மனம் திறந்த ஹர்பஜன் சிங்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…

2 hours ago

“நன்றி என்றால் என்னவென்றே தெரியாத தலைவர்”.. எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!!

சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…

3 hours ago

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…

15 hours ago