ஆயிரம், ஐநூறுக்கு மக்களை கையேந்த விட்டது யார்? காங்கிரஸுடன் கூட்டணி எதற்கு? – சீமான்
ஈரோட்டில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு குடும்ப தலைவி அனைவருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தகுதியுள்ள பெண்களுக்கு தான் உரிமைத்தொகை வழங்கப்படும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். தகுதியை கணக்கீடு நீங்கள் யார்?, எதுவுமே இருக்க கூடாது என்றால் பிச்சைக்காரியாக தான் இருக்க வேண்டும் என திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
திமுகவினருக்கு கொடுப்பார்கள், இதுதான் திமுகவின் கதை. ஏரளமான வாக்குறுதி அளித்த திமுக என்ன நிறைவேற்றி இருக்கு சொல்லுங்கள், தேவைப்படுவதும், கேட்பதும் கொடுக்காமல், கேட்காததை செய்துவிட்டு நல்லாட்சி கொடுக்கிறோம் என்று சொல்வது கேவலமாக இல்லையா? திமுக எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. நாட்டில் என்ன வளம் இல்லை. ஆனால் காலையில் பிள்ளைகள் பட்டினியாக வரும் நிலைக்கு வைத்திருந்தால் பிச்சைக்காரர்களாகத்தானே வைத்து இருக்கிறீர்கள்.
நீங்கள் ஏன் வளர்ச்சியை பற்றி பேசுகிறீர்கள். நல்லாட்சியை பற்றி பேசுகிறீர்கள். அதிகாலையில் பிள்ளைக்கு உணவு இல்லாத நிலைக்கு மாற்றிவிட்டு என்ன பேசுகிறீர்கள் என காட்டமாக கேள்வி எழுப்பினார். மதியம் உணவு, காலை உணவு என சோற்றுக்கு வழி இல்லாத நிலைய உருவாக்கிவிட்டு, ஆயிரத்துக்கும், ஐநூறூக்கும் மக்களை கையேந்த வைத்து விட்டீர்கள். ரூ.500, ரூ.1000 என மக்களை கையேந்தும் நிலைக்கு கொண்டுவந்தது யார்?.
80% வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக கூறும் திமுக, அதில் 8% வாக்குறுதியை காட்டட்டும் என்றார். மக்களை கையேந்த வைத்து விட்டு இதெல்லாம் ஒரு ஆட்சி முறை என எப்படி சொல்வது. காலை உணவு கூட இல்லாமல் குழந்தை வருகிறது என்றால் எவ்வளவு வறுமையில் இருக்கிறது என்று பாருங்கள் எனவும் குற்றசாட்டினார்.
மேலும், நீட், சிஏஏ, என்.ஆர்.சி, ஜி.எஸ்.டி உள்ளிட்டவைகளை காங்கிரஸ் தான் கொண்டு வந்தது. அதனை பாஜக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் திமுகவின் கூட்டணி கட்சி காங்கிரஸ் தான் ஆட்சியில் உள்ளது. தற்போது தமிழகத்துக்கு காவிரி நீரை தர மறுக்கிறது, கூட்டணியை விட்டு திமுக வெளியேற வேண்டியது தானே, காவிரி நீரை தரமறுக்கும் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி எதற்கு? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.