மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியான வரிச்சூர் செல்வத்துக்கு காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வி.வி.ஐ.பி தரிசனம் வழங்கியது யார் என்று காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் அத்திவரதர் தோன்றுகிறார். இந்த ஆண்டு கடந்த 4 ம் தேதி தோன்றிய அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கானோர் தரிசித்து வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் சாதாரணமாக வரிசையில் நின்று தரிசனம் செய்யும் நிலையில் உயர் அதிகாரிகள், அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பலருக்கு சிறப்பு தரிசனம் என்ற பெயரில் வி.வி.ஐ.பி தரிசனம் பாஸ் வழங்கியுள்ளது கோவில் நிர்வாகம்.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் அந்த பாஸ் பயன்படுத்தி தரிசனம் செய்துள்ளார். சுவாமி அருகில் உட்கார்ந்து தரிசனம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றுள்ள ரவுடி சிறப்பு தரிசனம் செய்து இருப்பது பற்றி பலர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக அந்த நேரம் பணியில் இருந்த காவலர்களை விசாரித்து வருகின்றனர்.
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…