விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா நிவாரணத்திற்கு யார் அதிகம் பணம் கொடுத்தது? விஜயா? ரஜினியா? என்பது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.
கொரோனா நிவாரண நிதியுதவியாக பலரும் தங்களால் இயன்ற நியுதவிகளை அளித்து வருகின்றனர். இதில், திரைப்பட நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என பலர் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் 22 வயதான யுவராஜ் விஜய் ரசிகர் ஆவார். இதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் 22வயதான தினேஷ் பாபு இவர் ரஜினி ரசிகர் ஆவார். இருவருமே நண்பர்கள்.
நேற்று இருவரும் குடிபோதையில், கொரோனா நிவாரணத்திற்கு யார் அதிகம் பணம் கொடுத்தது? விஜயா? ரஜினியா? என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், தினேஷ் பாபு, யவராஜை அடித்து தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதில் தலையில் அடிபட்டு யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தினேஷ் பாபுவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…