திமுக அரசு தமிழ்த் தேசிய இனத்திற்கான அரசு என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டான் நிலைநாட்டி இருக்கிறார் என்று வைகோ பாராட்டு.
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசாணை வெளியிட்டிருந்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு பாராட்டுகள் குவிந்தன. அந்தவகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதோ அப்போதெல்லாம் அது தமிழின் ஆட்சியாக, தமிழினத்தின் ஆட்சியாக இருந்துள்ளது. அதே நிலை தற்போதும் தொடர்வதற்கான பல அரசாணைகளை வெளியிட்டு வருகிறது திமுக அரசு.
இனி தமிழே தெரியாமல் எவரும் தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் சேர முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய விதிகள் மாற்றப்பட்டு, டிசம்பர் 1ஆம் நாள் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் இருபது விழுக்காடு முன்னுரிமை அளிக்கும் விதிமுறைகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டது.
தற்போது தமிழ்தாய் வாழ்த்தை தமிழ்நாடு அரசின் பாடலாக அறிவித்து இருப்பது முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசின் சாதனை மகுடத்தில் வைரமாக ஒளி வீசுகிறது. இந்த ஒற்றை அரசாணையின் மூலம் “நாம் யார்?” என்று சிலரின் முகத்தில் ஓங்கி அறைந்து இருப்பதற்கு பாராட்டுக்கள்.
பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து, பயிற்சி பெற்றவர்களால் வாய்ப் பாட்டாகப் பாடப்பட வேண்டும் என்பது பாராட்டுக்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டியிருப்பது வாழ்த்திப் போற்றத்தக்கது.
திமுக அரசு தமிழ் அரச, தமிழ்த் தேசிய இனத்திற்கான அரசு என்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிலைநாட்டி இருக்கிறார் என்று பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…