திருச்செந்தூரில் நேற்று மாலை சசிகலாவை தேனி மாவட்ட ஆவின் தலைவரும், ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருமான ஓ.ராஜா நேரில் சந்தித்து பேசிய நிலையில் ஓ.ராஜா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.ராஜா, நான் என்ன முதல்வர் மு.க.ஸ்டாலினையா சந்தித்தேன்..? அதிமுகவுக்கு சசிகலா தலைமைதான் தேவை. அதிமுகவை சசிகலாதான் தலைமையேற்று நடத்த வேண்டும்.
என் விருப்பப்படிதான் சசிகலாவை சந்தித்தேன். சசிகலா சந்திப்பு பற்றி அண்ணன் ஓபிஎஸ்ஸிடம் தெரிவிக்கவில்லை. அதிமுக தரைமட்டத்திற்க்கு வந்துவிட்டது. கட்சியின் தலைவர்கள் தொண்டர்களை பற்றி நினைப்பதேயில்லை. இரட்டைத்தலமை இரட்டைக்குழல் துப்பாக்கி அல்ல தீபாவளி துப்பாக்கி. தேர்தல் தோல்விக்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தான் காரணம்.
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் கருத்தாக உள்ளது. என்னை கட்சியை விட்டு நீக்க இவர்கள் யார்..? எனக்கு சசிகலா தான் பொதுச்செயலாளர் என தெரிவித்தார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…