சென்னை:திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போதே எதிர்பாராத விதமாக திடீரென சீமான் மயங்கி விழுந்தார்.
திருவொற்றியூர்,அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதிகளில் பாலம் அமைப்பதற்காக வீடுகள் இடிக்கப்பட்டு வரும் நிலையில்,பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றிருந்தார்.அவருடன் கட்சியினரும் சென்றிருந்தனர்.
பயம் வேண்டாம்:
கடுமையான வெயில் வாட்டி விதைக்கும் நிலையில்,வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் முழக்கமிட்டனர். பின்னர்,செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசுகையில்: “நம்பிக்கையோடு இருங்கள்,பயப்பட வேண்டாம்.எந்த கட்டிடம் இடித்தாலும் அங்கே நாம் தமிழர் கட்சி வந்து போராடுவோம் என்று கூறினார்.
மாற்று இடம்:
மேலும்,கடுமையான வெயில் அடிக்கும் நிலையிலும் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால்,குடிநீர்,மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் திடீரென ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்க வருவது ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே,அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் தர வேண்டும்.
தீடீரென மயங்கிய சீமான்:
இந்நிலையில்,செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போதே எதிர்பாராத விதமாக திடீரென சீமான் மயங்கி விழுந்தார்.பின்னர், அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் உடனடியாக சீமானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நலமுடன் சீமான் வீடு திரும்பினார்.தற்போது அவர் நன்றாக உடல்நலத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிக வெயில்:
இதனிடையே,காலையில் உணவருந்தாமல் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதும்,அதிக வெயிலினாலும் சீமான் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிகழ்வு நாம் தமிழர் கட்சியினர் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…