Election2024 : கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஜோதிமணி பிரச்சாரம் செய்கையில் தனது அம்மாவை நினைத்து அழுதுவிட்டார்.
கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று தனது சொந்த ஊரான அறவன்குறிச்சி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் அங்குள்ள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார் . அப்போது பேசுகையில் மறைந்த தனது தாய் நினைவு வந்து கண்ணீர் விட்டு அழுதார் .
அவர் பேசுகையில் , சிலிண்டர் விலை 300 இருந்தது 1000 ரூபாய் ஆகிவிட்டது . இந்த தொகுதியில் நான் என்ன செஞ்சேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அதனால் அதனை செஞ்சேன், இதனை செஞ்சேன் என நான் கூறவில்லை. எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சது தான்.
நான் 4 வருடம் 9 மாதங்கள் எம்பியாக இருந்துள்ளேன். எப்போதும் பணி முடிய இரவு ஆகிவிடும் நம்ம ஊருக்கு வருவதற்கு. அப்போ அப்பா இருப்பாங்க என கூறிவிட்டு தனது தாயை நினைத்து அழுவிட்ட்டார். உடனே, அங்கிருந்த மக்கள் நீ அழுகாதம்மா, அதான் நாங்க இருக்கோம் என ஆறுதல் கூறினர்.
பின்னர் அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு, நீங்க தான் எனக்கு குடும்பம் மாதிரி இருந்திருக்கீங்க என கூறிவிட்டு, தனது பிரச்சாரத்தை அப்படியே நிறுத்திவிட்டு சென்றார் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…