பேனா சிலை தொடர்பாக 14 துறைகளிடம் தேசிய பசுமை தீப்பாயம் பதில் விளக்கம் கேட்ட்பட்ட நிலையில் 2 துறைகள் மட்டுமே பதில் விளக்கம் அளித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவே மிகப்பெரிய பேனா சிலை அமைக்கும் விவகாரம் தொடர்பாக, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை அளித்து இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு தெரிவித்து இந்த வழக்கை ஒத்திவைத்து இருந்தனர். அதன் பிறகு இன்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் விசாரணைக்கு பசுமை தீர்பாயத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் குறிப்பாக இந்த பேனா சிலை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றதா என கேட்டனர். அதற்கு வழக்கறிஞர்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பதில் அளித்தனர்.
இதனை தொடர்ந்து அவர்களிடம் எழுத்துப்பூர்வமான அறிக்கை பெறப்பட்டதா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பெறப்பட்டது என்று கூறினர். வழக்கு தொடர்ந்த ராம்குமார் ஆதித்யனிடம் பசுமை தீர்ப்பாயத்தினர், நீங்கள் ஏன் கருத்து கேட்டு கூட்டத்தில் கலந்துகொண்டு கேள்வி கேட்கவில்லை என கேட்டனர்.
இதனை அடுத்து, ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு கோரி இருந்த நிலையில், அது தொடர்பாக அரசு சார்பில் 14 துறைகளிடம் பதில் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், 14 துறைகளில் இருந்து பொதுப்பணித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மட்டுமே பதில் விளக்கமளித்துள்ளனர். மீதமுள்ள 12 துறை இன்னும் பதிலளிக்கவில்லை அதன் காரணமாக கால அவகாசம் கேட்டு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கை ஏற்று வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…