பொங்கல் சிறப்பு பேருந்துகள்: எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் செல்லும்!
தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளதை அடுத்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை ஈடுபட்டார். இந்த ஆலோசனை முடிந்தபிறகு, பொங்கல் சிறப்பு பேருந்துகள் வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
அதன்படி, சென்னையில் இருந்து மட்டும் சுமார் 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகள் மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம், கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும், மாநிலம் முழுவதும் 19,484 பேருந்துகள் இயக்கப்படும். மேலும், பொங்கல் விடுமுறைக்குப் பின் 17,589 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் பொங்கலுக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். கோயம்பேடு, தாம்பரம், கிளாம்பாக்கம் ஆகிய பேருந்து நிலையங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படும் என தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி மாநிலம் முழுவதும் 19,484 பேருந்துகள் இயக்கப்படும்..!
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, மயிலாடுதுறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் செல்லும் எஸ் சி டி சி, ஈசிஆர் வழியாக மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம் வேளாங்கண்ணி செல்கின்ற பேருந்துகள் கோயம்பேடு டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இவற்றை தவிர NH 45 வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் கிளம்பாக்கம், கலைஞர் நூற்றான்டு பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.