இன்று முதல் இயங்கவுள்ள கடைகள் எவை ? விவரம் இதோ

Published by
Venu

இன்று முதல் தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதனால் தினந்தோறும் பாதிப்பும்,  உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

இதனிடையே தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில், அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு . பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட  பகுதிகளை தவிர்த்து தமிழகத்தில் உள்ள பிற பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு . பிற தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

இன்று முதல்  தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளது.சலூன் கடைகள், ஸ்பா மற்றும் அழகுநிலையங்கள் இயங்க தடை தொடரும்.  விவரங்கள் இதோ…

1.டீ கடைகள் (பார்சல் மட்டும் ) 

2.பேக்கரிகள் (பார்சல் மட்டும் )

3.உணவகங்கள் (பார்சல் மட்டும் ) 

4.பூ,பழம்,காய்கறி மற்றும் பல சரக்கு கடைகள் 

5.கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள் 

6.சிமெண்ட்,ஹார்டுவேர்,சானிடரிவேர் விற்கும் கடைகள்

7.மின்சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

8.மொபைல் போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

9.கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்

10.வீட்டு உபயோக இயந்திரங்கள்  மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள் 

11.மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள் 

12.கண்கண்ணாடி மற்றும்  பழுது நீக்கும் கடைகள் 

13.சிறிய நகைக்கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாத கடைகள் )

14.சிறிய ஜவுளி கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாத கடைகள் )

15.மிக்ஸி,கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள் 

16.டிவி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் 

17.பெட்டி கடைகள் 

18.பர்னிச்சர் கடைகள் 

19.சாலையோர தள்ளுவண்டி கடைகள்

20.உலர் சலவையகங்கள்

21.கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்

22.லாரி புக்கிங் சர்வீஸ்

23.ஜெராக்ஸ் கடைகள்

24. இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் விற்பனை நிலையங்கள்  

25.இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள்

26.நாட்டு மருந்து விற்பனை கடைகள் 

27.விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள் 

28.டைல்ஸ் கடைகள் 

29.பெயிண்ட் கடைகள் 

30.எலக்ட்ரிக்கல் கடைகள்

31.ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை கடைகள் 

32.நர்சரி கார்டன்கள்

33.மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள்

34.மரம் அறுக்கும் கடைகள்  

Published by
Venu

Recent Posts

13 நிமிடங்களில் 13 கி.மீ…. மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்..!

13 நிமிடங்களில் 13 கி.மீ…. மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்..!

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…

7 minutes ago

தங்கம் விலை சற்று சரிவு… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…

14 minutes ago

‘ராஞ்சி போட்டிகளில் விளையாட மாட்டோம்?’ கோலிக்கு கழுத்து வலி! கே.எல்.ராகுலுக்கு முழங்கை பிரச்சனை!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…

21 minutes ago

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை? உறுதியானது நீதிமன்ற தீர்ப்பு!

நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…

1 hour ago

தூத்துக்குடியை அடுத்து மதுரை, திருச்சியில் புதிய டைடல் பார்க்! அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…

சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…

2 hours ago

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி ரெடி… இன்று மதியம் அறிவிக்கும் பிசிசிஐ!

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…

3 hours ago