நாளை விருப்பமனு பெறப்பட்டு நாளை மறுநாள் நேர்காணல் செய்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என காதர் மொய்தீன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாள்கள் மட்டுமே உள்ளதால் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவற்றில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதைதொடர்ந்து, திமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 57 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 3 தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடையநல்லூர் தொகுதி உறுதியான நிலையில், மீதமுள்ள இரு தொகுதிகளை இறுதி செய்ய ஐயூஎம்எல் அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஐயூஎம்எல் சார்பில் வாணியம்பாடி, ஆம்பூர் இரு தொகுதிகள் கேட்கப்பட்டாகவும் அதில் வாணியம்பாடி கிட்டத்தட்ட உறுதியானதாக ஐயூஎம்எல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்த்தக்கது.
இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்தபோது, நாங்கள் கேட்டது கிடைத்திருக்கிறது. இதனை அறிவிக்கக்கூடிய பொறுப்பை ஸ்டாலின் செய்வார். மேலும், எங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. நாளை விருப்பமனு பெறப்பட்டு நாளை மறுநாள் நேர்காணல் செய்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…