கடலூரில் இரண்டு லட்சுமியில் வெற்றி பெற்றது எந்த லட்சுமி .!
- நேற்று நள்ளிரவு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் விஜயலட்சுமி 1,710 வாக்குகளும் , ஜெயலட்சுமி 2860 வாக்குகள் பெற்று இருந்தனர்.
- ஆனால் விஜயலட்சுமி ஆட்டோ சின்னத்தில் வெற்றி பெற்றார் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்தார்கள்.
கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரியில் நேற்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று காலை நிறைவடைந்தன.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் குமணங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் ஜெயலட்சுமியும் , அவரை எதிர்த்து விஜயலட்சுமி என்பவர் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டார்.
நேற்று நள்ளிரவு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் விஜயலட்சுமி 1,710 வாக்குகளும் , ஜெயலட்சுமி 2860 வாக்குகள் பெற்று இருந்தனர். ஆனால், ஜெயலட்சுமி ஆட்டோ சின்னத்தில் வெற்றி பெற்றார் என அறிவிப்பதற்கு பதிலாக விஜயலட்சுமி ஆட்டோ சின்னத்தில் வெற்றி பெற்றார் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்தார்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி அதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார். அவரின் புகாரை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் ஜெயலட்சுமி உறவினர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.