தனியாக வந்தாலும், அணியாக வந்தாலும் சேர்க்க மாட்டோம் – ஜெயக்குமார்
அணியாக வந்தாலும், தனியாக வந்தாலும் அதிமுக கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க மாட்டோம் என ஜெயக்குமார் பேட்டி.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. எந்த நிலைமையிலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். கூட்டணியில் இடம்பெறுபவர்களுக்கு அதிமுக தான் இடம் ஒதுக்கும்.
அணியாக வந்தாலும், தனியாக வந்தாலும் அதிமுக கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.