குளங்களை தூர் வாரினார்களோ இல்லையோ அரசு கஜானாவை தூர் வாரிவிட்டார் – டிடிவி தினகரன்
மக்கள் மற்றும் இயற்கையை பாதிக்கும் திட்டங்களை அனைத்தும் தமிழகத்தில் வந்ததற்கு காரணம் திமுக என்று டிடிவி தினகரன் குற்றசாட்டு.
தேவகோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவை நம்பினால் யாராக இருந்தாலும் சாலையில் தான் நிற்க வேண்டும் என்றும் திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து அதிகரித்து விடும் எனவும் விமர்சித்துள்ளார்.
மக்கள் மற்றும் இயற்கையை பாதிக்கும் திட்டங்களை அனைத்தும் தமிழகத்தில் வந்ததற்கு காரணம் திமுக தான் என குற்றசாட்டியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பச்சோந்தி, காலில் விழுந்தே பதிவியை வாங்கியவர் என்றும் ஏரி குளங்களை தூர் வாரினார்களோ இல்லையோ அரசு கஜானாவை தூர் வாரிவிட்டார் எனவும் விமர்சித்து பேசியுள்ளார்.