தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது நிச்சயமாக ஜனநாயக சீரழிவுதான் -திருநாவுக்கரசர்
தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது நிச்சயமாக ஜனநாயக சீரழிவுதான் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வருகின்ற 21-ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் மூலம் தமிழகத்தின் நலன் காக்கப்பட வேண்டும்.
தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது நிச்சயமாக ஜனநாயக சீரழிவுதான்.நாடு முழுவதும் இந்த நிலை தொடர்கிறது . தேர்தலில் நாட்கள் குறைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.