எந்த மாநில அரசாக இருந்தாலும் சரி, மத்திய அரசாக இருந்தாலும் சரி கண்டிப்பாக எதிர்ப்போம் …! அமைச்சர் சி.வி.சண்முகம்
எந்த மாநில அரசாக இருந்தாலும் சரி, மத்திய அரசாக இருந்தாலும் சரி கண்டிப்பாக எதிர்ப்போம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும், அவர் நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். எந்த மாநில அரசாக இருந்தாலும் சரி, மத்திய அரசாக இருந்தாலும் சரி கண்டிப்பாக எதிர்ப்போம் என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.