தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!
"2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி நமதே" என்று திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து, மேடையில் பேசிய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2026 இல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமில்லை, இந்தியாவுக்கான வெற்றி. 200 இல்லை, 200க்கும் மேல் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்” என்றார்.
பின்னர், திமுக செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் பேச்சு கவனம் ஈர்த்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேலாக திமுக வெல்லும் என்றும், தமிழகத்தில் மீண்டும் தாம் ஆட்சியமைப்பது உறுதி எனவும் ஸ்டாலின் உறுதியாக கூறியுள்ளார்.
நம்முடைய கொள்கை கூட்டணிக்கு எதிரா பலரும் அரசியல் கணக்கு போடுறாங், நான் உறுதியா சொல்றேன். நம்ம கொள்கைக் கூட்டணிக்கு எதிரா அவங்க போடுற கணக்கெல்லாம் தப்புக்கணக்கா தான் ஆகும். மேலும், மக்களின் ஆதரவு திமுகவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதாக கூறிய ஸ்டாலின், 7வது முறையும் ஆட்சியமைப்பதுதான் நம் லட்சியம் என சூளுரைத்தார்.
வெற்றிக் கணக்கு நம்ம கூட்டணிக்குத்தான் எதிர்க்கட்சிகள் எல்லாம் வாக்குகளைப் பிரிக்க தனித்தனியா வந்தாலும் சரி, மொத்தமா சேர்ந்து வந்தாலும் சரி, 2026 தேர்தல்ல திமுக கூட்டணிதான் வெற்றி பெறும், அதுவும் சாதாரண வெற்றி இல்ல, சரித்திர வெற்றி என்று கூறியுள்ளார்.