எங்கெல்லாம் போக்குவரத்து இயக்கம்&தடை – சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு!
சென்னை:வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் குறித்து போக்குவரத்துக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில், வெள்ளப் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மேலும்,வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதனால்,தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல,சாலைகள், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
இந்நிலையில்,வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் குறித்து போக்குவரத்துக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதன்படி,சென்னையில் எங்கெல்லாம் போக்குவரத்து இயக்கம்,தடை என்பதைக் காண்போம்.
1. மழை நீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்:
i) வியாசர்பாடி சுரங்கபாதை
ii) கணேஷபுரம் சுரங்கபாதை
iii) அஜாக்ஸ் சுரங்கபாதை
iv) மேட்லி சுரங்கபாதை
V)துரைசாமி சுரங்கபாதை
vi) அரங்கநாதன் சுரங்கபாதை
vii)காக்கன் சுரங்கபாதை ( இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ)
2. மழை நீர் தேங்கியுள்ள சாலையின் பெயர்:-(போக்குவரத்து நடைபெறுகிறது)
i) ஈவிஆர்-சாலை – அழகப்பா சாலை
ii) கால்நடை மருத்துவமனை – வேப்பேரி சாலை மசூதி (G2-Tr-PS)
i) பர்னபி (ஈவிஆர்-சாலை) & என்எல்சி
iv) பிரிக்லின் சாலை
v) கடற்கரை சேவை சாலை (மூடப்பட்டது)
vi) சிவசுவாமி சாலை
vii) ஆர்.ஆர் ஸ்டேடியம்
vii) வள்ளுவர் கோட்டம் & பள்ளி சாலை
ix) NH & KH ஸ்டெர்லிங் ரோடு முதல் லயோலா கல்லூரி வரை
x) TTK சாலை, எல்டாம்ஸ் சாலை, தபால் காலனி
xi) ராம் தியேட்டர் – வடபழனி
xii) பெரியார் பாதை
xili) 100 அடி சாலை பல்லவா மருத்துவமனை
xiv) பசுல்லா சாலை- வடக்கு உஸ்மான் சாலை XV) வாணி மஹால், ஜிஎன் செட்டி, விஆர் சாலை
xvi) அருணாச்சலம் சாலை
xvi) PT.ராஜன், காமராஜ் சாலை
xvii) ||| கிராஸ், கஸ்தூரி பாய் நகர், இந்திரா நகர்
xix) கற்பககா தோட்டம்
xx) விஜய நகர்
xxi) முகமது சதக் கல்லூரி
xxii) விடுதலை நகர் கைவலி முதல் மடிப்பாக்கம் சதா சிவம் நகர்
xxii) J10 குளோபல் மருத்துவமனை
3.மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து தடை பெற்றுள்ளது.
i) கே.கே நகர் – ராஜ மன்னார் சாலை
i) மயிலாப்பூர் – டாக்டர் சிவசாமி சாலை
i) செம்பியம் – ஜவஹர் நகர்
iv) பெரவள்ளுர் – 70 அடி சாலை
v) டாக்டர் அம்பேத்கார் ,புளியந்தோப்பு சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் ரோடு, பட்டாளம் மணி கூண்டு
vi) வியாசர்பாடி – முல்லை நகர் பாலம் vi) பள்ளிக்கரனை 200 – அடி சாலை காமாட்சி மருத்துவமனை முதல் ஈச்சங்காடு சந்திப்பு வரை ( சென்னை பெருநகர பேருந்துகள் மட்டும் செல்கிறது).
vili) சென்னை கோட்டை இரயில் நிலையத்திலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழி.
4.மழைநீர்பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு:
i) மாதவரம் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட எம்.ஆர்.எச் சாலை மஞ்சம்பாக்கம் ரவுண்டானாவில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் வழியில் ரெட்டேரி நிரம்பி நீரானது வெஜிடேரியன் வில்லேஜ் ரோடு வழியாக புழல் கால்வாயை அடைவதால் M.R.H சாலையில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் நெடுஞ்சாலைதுறை மற்றும் போக்குவரத்து காவல்துறையின் மூலம் சாலை ஒருபக்கமாக மூடப்பட்டுள்ளது. உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்கள் அனைத்தும் சாலையின் ஒரே பக்கத்தின் வழியாக செல்கின்றது.
ii) வடபழனி முதல் கோயம்போடு செல்லும் 100 அடி சாலையில் இலகு ரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
ii) மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் லஸ் வழியாகவும் இலகு ரக வாகனங்கள் மந்தைவெளி மார்க்கெட் செயின்ட் மேரிஸ் சாலை வழியாக அனுப்பப்படுகிறது.
5. சாலையில் பள்ளம்:
திருமலைப்பிள்ளைரோடு,காமராஜர்இல்லம் முன்பு சாலையில் பள்ளம்ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வாணிமஹால்-பென்ஸ்பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பிவிடப்படுகிறது. வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வாணிமஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை ரோட்டில் செல்லலாம்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.