கட்சி தலைமை எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன்-தமிழிசை
- அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக-பாமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளது.
- கட்சி தலைமை எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.அதேபோல் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சி கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,கட்சி தலைமை எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன்.தூத்துக்குடி தொகுதியை கேட்டு வருகிறோம்.இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.