ஓபிஎஸ் தரப்பு எங்கு சென்றாலும் நியாயம் எங்கள் பக்கம் இருப்பதால் வெற்றி பெறுவோம் என்று தங்கமணி பேட்டி.
ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்த நிலையில், உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி, நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு, ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தடை நீங்கியது எனவும் தீர்ப்பு வழங்கினார். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, தர்மத்தின் வாழ்வு தனை சூதுகவும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு சான்றாக தீர்ப்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் யாரும் ஓபிஎஸ் அணியில் இணையவில்லை. அமமுகவில் இருந்து தான் ஓபிஎஸ் தரப்பில் இணைந்து வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பு எங்கு சென்றாலும் நியாயம் எங்கள் பக்கம் இருப்பதால் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…