மழை பாதிப்பின் போது முதல்வர் எங்கு இருந்தார்..? நிர்மலா சீதாராமன் கேள்வி..!
டெல்லியில் தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். அப்போது தென் மாவட்டங்களில் மழை குறித்து டிசம்பர் 12ஆம் தேதியே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்தது. 12ஆம் தேதியிலிருந்து இந்திய வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு எச்சரிக்கை வழங்கியது. மழை குறித்து முன்னெச்சரிக்கை கிடைக்கவில்லை எனக் கூறுவது தவறு என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தென் மாவட்ட மழை பாதிப்பு அறிந்தவுடன் உதவிகளை செய்ய பிரதமர், உள்துறை அமைச்சர் அறிவுறுத்தினர்.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் தாமதமாக சென்றனர். தேசிய பேரிடர் மீட்பு படை செல்வதற்கு முன் தமிழக அதிகாரிகள் யாரும் மீட்பு பணியில் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு வானிலை ஆய்வு மையம் மீது குற்றம் கூறுவது ஏன்..? இன்ச் பை இன்ச் எவ்வளவு மழை வரும் என சரியாக கனித்து கூற முடியாது.
பேரிடர் நிதி ரூ.900 கோடி வழங்கப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்..!
சென்னையில் ரூ. 4000 கோடி செலவிட்டு மழை நீர் வடிகால் அமைத்ததாக அமைச்சர் கூறினாரே என்னவானது..? 4000 கோடியில் 45 சதவீதம் மட்டும் செலவழித்து விட்டு 92 சதவீதம் செலவழித்ததாக கூறியது ஏன்..? மழைக்கு முன் 92 சதவீதம் வடிகால் பணி முடிந்ததாக கூறினார். மழைக்கு பின் 42 சதவீதம் பணிகளை நிறைவு என மாற்றிப் பேசினார் ஏன் என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர் மழை பாதிப்பின் போது முதல்வர் எங்கு இருந்தார்..? தென் மாவட்ட மழை பாதிப்பின் போது தமிழக முதல்வர் டெல்லியில் இருந்தார். தமிழக மக்களுடன் நிற்காமல் இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.கஸ்டாலின் டெல்லி வந்திருந்தார். தமிழக முதல்வர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை இதன் மூலம் தெளிவாக தெரிகிறது என கூறினார்.