போலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எங்கு வைக்கப்பட்டுள்ளது? – உயர்நீதிமன்றக்கிளை

Default Image

தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களில் எவ்வளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எங்கு வைக்கப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி.

பள்ளிக்கு அருகே கஞ்சா விற்பனை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்க கோரி  பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் 50 கிலோவுக்கு அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டால், அந்த வழக்கு போதை தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கும், அதற்கு கீழான வழக்குகள் அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்படும் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு நீதிபதி, முன்பெல்லாம் 20 கிலோவுக்கு அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டாலே, அந்த வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது 50 கிலோ என அதிகரித்தது ஏன் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு போதுமான அளவு காவல்துறையினரை நியமிக்க வேண்டும்.

பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் காவல்துறையினர் பலர் பொறியியல் பட்டதாரிகளாக உள்ளனர். அவர்களை இதுபோன்ற சிறப்பு பிரிவுக்கு பணியமர்த்துகையில், நவீன தொழில்நுட்பம் குறித்து அவர்கள் அறிந்திருப்பதால் விரைவாக குற்றவாளிகளையும், அதன் நெட்வொர்க்குகளையும் கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும் என கூறினார்.

அதேபோல, போதைப்பொருட்கள் எங்கிருந்து கிடைக்கின்றன என அறிந்து, அதன் மூலத்தை அறிந்து அவற்றை அளிப்பதும் முக்கியம் என குறிப்பிட்ட நீதிபதி, போதைப்பொருட்களை தடுக்க நடவடிக்கை எடுத்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை வெகுவாக குறையும் என்றும், அது அரசிற்கு நல்லது என்றும் கூறியுள்ளார்.

மேலும், இன்றைய சூழலில் ஊழலின் ஆழம் அதிகம் இருக்கும் நிலையில் லஞ்சம் வாங்க யாருக்கும் அச்சம் இருப்பதில்லை. வெட்கமின்றி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு அச்சம் ஏற்பட வேண்டும். அதேபோல மனுதாரர் தரப்பில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சாவில், காவல்துறையினரே குறிப்பிட்ட பகுதியை மறைத்துவைத்துக்கொண்டு, அவ்வப்போது அப்பாவிகள் மீது கணக்கு காண்பிக்கின்றனர் என்ற குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அரசு தரப்பில் 2019-ஆம் ஆண்டிற்கு பின் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எதுவும் அளிக்கப்படவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களில் எவ்வளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எங்கு வைக்கப்பட்டுள்ளது? ஒருவேளை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு அந்த கஞ்சா அனுப்பப்பட்டது நில், அதற்கான உத்தரவின் நகல் உள்ளிட்ட விவரங்களை செப்.13-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்.15ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்