தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கும் – அமைச்சர் கடம்பூர் ராஜு!
தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கமளித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தீவிரம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றதால் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கூடங்கள் போக்குவரத்து, திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்கள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் இருந்தது. மார்ச் மாதம் முதல் தற்பொழுது வரை 144 தடை உத்தரவு தமிழகத்தில் அமலில் உள்ளது. இருப்பினும், மக்களுடைய வாழ்வாதாரத்துக்கு தேவையான சில தவர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்து பள்ளிக் கல்வித் துறைகள் மற்றும் உணவு கூடங்கள் என அனைத்தும் தற்பொழுது திறக்கப்பட்ட நிலையில் உள்ளது.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சர் கடம்பூர் ராஜு அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவரிடம் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான தளர்வுகளை அரசு முறைப்படி அமல் படுத்தி வருவதாகவும் மத்திய அரசு வருகிற அக்டோபர் 15ஆம் தேதி முதல் திரையரங்குகளில் திறக்கலாம் என அறிவித்துள்ளது. எனவே அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் எனவும், விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.