தாமிரபரணி இணைப்புத் திட்டம் எப்போது முடிவடையும் ? பட்ஜெட்டில் அறிவிப்பு
தாமிரபரணி இணைப்புத் திட்டம் 2022 மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
அப்பொழுது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,தாமிரபரணி இணைப்புத் திட்டம் 2022 மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் .இத்திட்டத்தில் தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய 6 நதிகள் இணைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.