தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு பின் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பள்ளிகள் திறப்பது குறித்து 8-ஆம் தேதிக்கு பிறகு முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே, தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.
மேலும், உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளை 15ஆம் தேதிக்கு பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று ஊரடங்கு அறிவிப்பின் போது தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில்…
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…