10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?- அமைச்சர் அறிவிப்பு

Default Image

10, 11, 12-ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வர்கள் பிப்.1 வரை விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு என அமைச்சர் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 17ம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இதுபோன்று,11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வை மார்ச் 1 முதல் 9-ஆம் தேதிக்குள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே மார்ச் 6 முதல் 10 வரை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும்,  10, 11, 12-ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வர்கள் பிப்.1 வரை விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2022-23 பொதுத் தேர்வு கால அட்டவணை கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது. அதன்படி, 12-ம் வகுப்புக்கு மார்ச் 13 முதல் ஏப்.3-ம்தேதி வரையும், 11-ம் வகுப்புக்கு மார்ச் 14-ல் தொடங்கி ஏப்.5-ம் தேதி வரையும், 10-ம் வகுப்புக்கு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரையும் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்