பெண்களுக்கென ‘பிங்க் ஆட்டோ’ திட்டம்… எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பிங்க் நிற ஆட்டோவில் ஜி.பி.எஸ், கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

PinkAuto

சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘பிங்க்’ ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்கும்படி, மோட்டர் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண்களே இயக்கும் இந்த ஆட்டோக்களில் ஜிபிஎஸ் மற்றும் VItd device எனப்படும் வாகன கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டிருக்கும். மார்ச் மாத இறுதிக்குள் சென்னையில் பயன்பாட்டுக்கு வரவுள்ள இத்திட்டம், படிப்படியாக மாநிலம் முழுவதும் கொண்டுவரப்பட உள்ளது.

சென்னை நகர எல்லைக்குள் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பெண் ஓட்டுநர்களால் இயக்கப்படும் பிங்க் நிற ஆட்டோக்கள் செயல்படும். இதற்காக கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், சமூக நலம் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன், 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கி, இரண்டு கோடி ரூபாய் செலவில் பிங்க் ஆட்டோக்களை இயக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.

மேலும், சிறப்பு வண்ண ஆட்டோக்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக ஹெல்ப்லைன் எண் மற்றும் ஜிபிஎஸ் கண்காணிப்பு அமைப்பும் இருக்கும், மேலும் இது காவல் துறையால் எளிதாகக் கண்காணிக்கப்படும்.

இந்த ஆட்டோக்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக ஹெல்ப்லைன் எண் மற்றும் ஜிபிஎஸ் கண்காணிப்பு அமைப்பும் இருக்கும். இதன் மூலம் காவல் துறையால் எளிதாகக் கண்காணிக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்