25 லட்சம் கோடிகள் கொள்ளை அடித்துள்ள ஒன்றிய மோடி அரசு எப்போது விலையைக் குறைக்கும்? – எம்பி ஜோதிமணி
பெட்ரோல் ,டீசலில் 25 லட்சம் கோடிகள் கொள்ளை அடித்துள்ள ஒன்றிய மோடி அரசு எப்போது விலையைக் குறைக்கும்? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ட்வீட்.
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது ட்விட்ர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார், அதில், விவசாயிகள் விரோத நரேந்திர மோடியின் ஆட்சியில் கொடும் துயரை அனுபவித்து வரும் விவசாயிகளுக்கு சிறப்பான வேளாண் நிதிநிலை அறிக்கையை வழங்கி, தனது 100 நாட்களை நிறைவு செய்யும் தமிழக அரசுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
வேளாண் நிதிநிலை அறிக்கையில், எனது கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் முருங்கை ஏற்றுமதி மண்டலங்கள், கரூரில் உழவர் சந்தை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.
வேளாண் துறைக்கு கடந்த ஆட்சியை விட மூன்று மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.11,894.48 கோடியிலிருந்து ரூ.34,220.65 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது வேளாண் துறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை காட்டுகிறது. சிறப்பான வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு பாராட்டுகள்.
மேலும், கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி 3 ரூபாய் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. பெட்ரோல், டீசலில் 25 லட்சம் கோடிகள் கொள்ளை அடித்துள்ள ஒன்றிய மோடி அரசு எப்போது விலையைக் குறைக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
வேளாண் துறைக்கு கடந்த ஆட்சியை விட மூன்று மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.11,894.48, கோடியிலிருந்து ரூ.34,220.65 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது வேளாண் துறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை காட்டுகிறது. சிறப்பான வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு பாராட்டுகள்!
— Jothimani (@jothims) August 14, 2021