தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது? வெளியாகிய புதிய அறிவிப்பு!
தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது, விடுதிகள் செயல்படவும் அனுமதி கொடுக்கபடுவதாகவும் தமிழக முதல்வரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அப்போது முதலே தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரம் கருதி ஒவ்வொரு தளர்வுகளாக தமிழக அரசு கொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ஊரடங்கும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு உத்தரவு வெளியாகியுள்ளதுடன், கல்லூரிகளில் செயல்படவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை மீன்வளம் மற்றும் கால்நடை சார்ந்த அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் வருகிற 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் இளநிலை முதுநிலை வகுப்புகளும் ஏழாம் (07.12.2020) தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் புதிதாக மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி 01.02.2021 முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதுடன், அப்பொழுது அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.