கன்னியாகுமரி- பாம்பன் இடையே எப்போது கரையை கடக்கும் ?
புரெவி புயலானது மணிக்கு 25 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரெவி புயலாக வலுப்பெற்றது. இலங்கையின் திரிகோணமலைக்கு 140 கி.,மீ தொலைவில் ’புரெவி’ புயல் மையம் கொண்டுள்ளது. பாம்பனுக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 370 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 550 கி.மீ தொலைவிலும் ” புரெவி புயல்” நிலைகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த புயலானது மணிக்கு 25 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் இன்று மாலை மற்றும் இரவு இடைப்பட்ட காலத்தில் இலங்கையை கடந்து பிறகு நாளை பகலில் பாம்பன் அருகே நிலைகொள்ளும்.பின்னர் மேற்கு தென்மேற்கு திசையில் தென் தமிழக கடற்கரையை ஒட்டி மெதுவாக நகர்ந்து.டிசம்பர் 3-ஆம் தேதி இரவு அல்லது டிசம்பர் 4-ஆம் தேதி அன்று அதிகாலையில் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையில் தென் தமிழக கடற்கரையை கடக்கக் கூடும்.இதன் தாக்கம் நாளை காலை ராமநாதபுரத்தில் தொடங்கி படிப்படியாக கன்னியாகுமரி வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.