ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவது எப்போது? டாக்டர் ராமதாஸ் கேள்வி?!
ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவது எப்போது?
இன்று குழந்தைகள் முதல் இளம் தலைமுறையினர் வரை அனைவருமே இணையதளத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதனால், இவர்கள் தங்களது பெரும்பகுதியான நேரத்தை இணையதளத்தில் தான் செலவிடுகின்றனர்.
இந்த இணையதளத்தில் தற்போது விளையாட்டு என்கின்ற பெயரில் பலரும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலர் தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர். அந்த வகையில், திருச்சியில் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ரூபாயை இழந்த ஆனந்த் என்ற காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது.’ பாமக தலைவர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.
மேலும், சூதாட்ட தற்கொலை சோகங்கள் தொடரும் நிலையில், அதற்கு காரணமான ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவது எப்போது? என கேள்வி எழுப்பியுள்ளார்.