கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்? – அமைச்சர் சேகர் பாபு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை ஒதுக்கப்பட்ட அடுத்த நாளே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல பேருந்து நிலையங்கள் இருந்தால்தான் நெரிசல் குறையும். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு விரிவாக மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.