7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசிடம் ஆளுநரின் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் 1991-ஆம் ஆண்டு முதல் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .ஆனால் இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
இதனிடையே கடந்த 22-ஆம் தேதி விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுடன் ,தமிழக ஆளுநரின் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .நீதிமன்றத்தின் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் மத்திய அரசின் கருத்து குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் கருத்தை கேட்ட பிறகு ஆளுநர் 7 பேர் விடுதலை குறித்து இன்று அல்லது நாளை முடிவு எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…