அதிமுக நிச்சயம் ஒன்றாக இணைந்து வெற்றிபெறும் என தஞ்சையில் சசிகலா பேட்டி.
பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அருளானந்த நகரிலுள்ள இல்லத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாவின் கொள்கையை வாயளவில் பேசிக்கொண்டு இருக்காமல், செயல்படுத்தி காட்டியவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா.
அண்ணா, புரட்சி தலைவர் மற்றும் அம்மாவின் வழியில் நாங்கள் சென்று கொண்டியிருக்கிறோம். அண்ணாவின் பிள்ளைகள் எல்லாரும் ஒன்றாக இணைந்து வெற்றி பெறுவோம். அதிமுகவில் நிச்சயம் ஒன்றாக இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். நாங்கள் எல்லாரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். அண்ணாவின் பாதையில் எங்கள் பயணம் தொடரும், தகுந்த நேரம் வரும் போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் என தெரிவித்தார்.
மேலும், வரும் தேர்தலில் அதிமுக ஒன்றாக இணைந்து நல்ல வெற்றியை பெறும், திமுக அரசு சொன்னதை செய்யவில்லை. ஏழை, எளிய மக்களுக்கு அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக நிறுத்துவது நல்லதல்ல, அதனை செயல்படுத்த வேண்டும். புரட்சி பயணம் செல்லு இடங்களில், திமுக அரசு எதையும் செய்யாமல் வஞ்சிப்பதாக மக்கள் கூறுகின்றனர். அரசாங்கத்தில் நிறைய தவறுகள் நடக்கிறது, அதனை சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…