திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவினரின் ரவுடிசத்தை அடக்குவதே முதல் வேலை – மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததும் அனைத்து ஊர்களிலும் அதிமுகவினர் ரவுடியிசத்தை ஒடுக்குவது தான் முதல் வேலை.
இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தேர்தல் வரும்போது மட்டும் வருவான் அல்ல நான் எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் என்று தெரிவித்துள்ளார்
மேலும் அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தால் விலை செஞ்சுரி அடிக்கும் என்றும், மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள கட்சிகள் மக்களை வாட்டி வதைக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததும் அனைத்து ஊர்களிலும் அதிமுகவினர் ரவுடியிசத்தை ஒடுக்குவது தான் முதல் வேலை என்றும் தெரிவித்துள்ளார்.