தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத்தொடங்கிய நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் விருப்பத்தை அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிக்கையாக இன்று சமர்பிக்கவுள்ளது.
தமிழகத்தில் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தற்பொழுது கொரோனாவின் தாக்கம் சற்று குறையத்தொடங்கிய நிலையில், கடந்த நவம்பர் மாதம் பெற்றோர்களிடம் பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால், பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இதனைதொடர்ந்து, தற்பொழுது முதல்கட்டமாக பொங்கல் விடுமுறைக்கு பின் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. அந்தவகையில், அனைத்து பள்ளிகளிலும் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடந்த 7 மற்றும் 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பெற்றோர்களிடம் பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், பள்ளியிலும் பெற்றோர் தெரிவித்த கருத்துகள் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும், பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை தொடர்ந்து அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், பெற்றோர்களின் விருப்பத்தை அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிக்கையாக இன்று சமர்பிக்கவுள்ளது. மாவட்டங்கள் வாரியாக பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படுவதாகவும், இதில் பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளிகளை திறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதால், அதன் அடிப்படையில் அறிக்கை சமர்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இம்மாதம் 3-ஆம் வாரத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்டமாக பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…