பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் : நயினார் நாகேந்திரனுக்கு போட்டியாக ஒருவர் வேட்புமனு?
பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்யும் போது மற்றொரு நபர் தாக்கல் செய்ய வந்ததால் அங்கு சலசலப்பு நிலவியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை நியமனம் செய்ய பாஜக தேசிய தலைமை முடிவு செய்திருந்தது.
அதன்படி, இன்று தேர்தல் விண்ணப்பங்கள் வழங்ப்பட்டன. பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எல்.முருகன் என பலரது பெயர்கள் பேசப்பட்டாலும், பாஜக தேசிய தலைமை தலைவரை ஒருமித்தமாக தேர்வு செய்ய வேண்டும் என விருப்பப்பட்டதால் நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்யும் போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர். அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது ஒரு நபர் தானும் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என வந்ததாக. இதனால், அங்கு சற்று சலசலப்பு நிலவியது. பிறகு, அங்குள்ளவர்கள் சமாதானம் செய்து அங்கிருந்து அவரை அனுப்பி வைத்தனர்.