அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடத்தியபோது ரூ.22 லட்சம் பறிமுதல் – அமலாக்கத்துறை

Enforcement Directorate

கடந்த 3-ஆம் தேதி திண்டுக்கல்லில் வேடசந்தூரில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.டி.சாமிநாதனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்பட்டது.

இந்த சோதனை முடிந்த மறுநாளே நமக்கு செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, தனலட்சுமி மார்பிள்ஸ் உரிமையாளர் வீடு, அலுவலகங்களிலும், சின்ன ஆண்டான் கோயில் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது.

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தற்போது இது குறித்து அமலாக்கத்துறைஅதனது ட்விட்டர் பக்கத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 9 இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்ததாகவும்,  இந்த சோதனையின்போது ரூ.22 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்,  ரூ.16 லட்சம் கணக்கில் வராத பொருட்கள்  மற்றும் 60 நில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சாமிநாதன் சோதனையின் போது ஆவணங்களை மறைக்க முயற்சி செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. ஆவணங்கள் இருந்த பையை சாமிநாதனின் உறவினர் சாந்தி எடுத்துச் சென்றது சிசிடிவி மூலம் தெரிய வந்தது. சாந்தி பையை எடுத்து சென்று ஓட்டுனர் சிவாவிடம் கொடுத்ததும் சிசிடிவி மூலம் தெரிய வந்துள்ளது. ஓட்டுநர் சிவா வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.22 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்