கோயம்பேடு சந்தை திறப்பு எப்போது? விக்கிரமராஜா விளக்கம்!
கோயம்பேடு சந்தையை திறப்பதற்கான தேதி, இன்றிரவு அறிவிக்கப்படும் என தமிழக வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து கொண்டே வருவதால், கோயம்பேடு மார்கெட்டை மீண்டும் திறக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகின்றனர்.
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் திறக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் ஒப்புதலுடன் கோயம்பேடு சந்தையை திறப்பதற்கான தேதி, இன்றிரவுக்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.