பிளஸ்2-வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு எப்போது..? அரசு அறிவிப்பு.!!

12th re exam

தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 19ம் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். இதனையடுத்து, இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த மாணவர்களுக்கு வரும் ஜூன் 19-ஆம் தேதி துணைத்தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறாத 47,934 பேர் விண்ணப்பித்து துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. அதன்படி, விண்ணப்பம் செலுத்தி ஒவ்வொரு பேப்பருக்கு எவ்வளவு பணம் என பணத்தைக் கட்டி நுழைவு சீட்டை (Hall Ticket) பெற்று வரக்கூடிய ஜூன் மாதம்- 19 ஆம் தேதி நடைபெறும் துணைத் தேர்வில் 47,934 பெரும் பங்கு பெறலாம்.

மேலும், அந்த தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு ஜூலை மாதமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. எந்தெந்த படங்களில் யார் யார் தோல்வி அடைந்துள்ளார்களோ அவர்களுக்கான அட்டவணை நாளை காலை 10 மணிக்கு தேர்வுகள் துறை இணையதயத்தளத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்