சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு வெளியானபின் பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் பகுதி மக்களுக்கு தமிழக அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு, அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், பொதுத்தேர்வுக்கான அட்டவணை தயார் நிலையில் உள்ளதாக கூறினார். ஆனால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதியின் அறிவிப்பு வெளியான பின்பு தான் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும், பள்ளிகளில் வாக்கு சாவடிகள் அமையவுள்ளதால், தேர்தல் அறிவிப்பை பொறுத்தே பொதுத்தேர்வுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…