10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது? அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!
தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
10-ஆம் வகுப்பு:
அடுத்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் நடைபெறும். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி, ஏப்ரல் 8-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26ல் தமிழ், மார்ச் 28ல் ஆங்கிலம் பாடத்தேர்வுகள் நடைபெறுகின்றன. ஏப்ரல் 1ல் கணிதம், ஏப்ரல் 4ல் அறிவியல், ஏப்ரல் 8ல் சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறுகிறது.
11-ஆம் வகுப்பு:
11-ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 19ல் தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறும். 11-ஆம் வகுப்புக்கு மார்ச் 4ல் தொடங்கி 25ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 14ல் வெளியிடப்படும்.
12-ஆம் வகுப்பு:
12-ஆம் வகுப்புக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். மார்ச் 1ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி, 22ம் தேதி வரை நடைபெறுகிறது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ல் தமிழ் பாடம், மார்ச் 5ல் ஆங்கிலம் பாடம், மார்ச் 8ல் கணினி அறிவியல், உயிரி வேதியியல், புள்ளியில் மற்றும் கணினி பயன்பாடுகள் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன. மார்ச் 11ல் வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல் தேர்வு நடைபெறுகின்றன.
மார்ச் 15ல் இயற்பியியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் தேர்வுகளும், மார்ச் 19ல் கணிதம், விலங்கியல், வணிகம், நுண் உயிரியல் உள்ளிட்ட தேர்வுகளும் நடைபெறுகின்றன. மேலும், மார்ச் 22ல் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. பொதுத்தேர்வு நேரம் காலை 10 மணி முதல் 1.15 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.