தமிழகத்தில் நீண்ட நாட்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் தொகுதி மறுவரையரை பணிகளை முடிக்காமல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.மேலும் தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.அப்பொழுது நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.மேலும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில், 4 மாதங்களில் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் மறுவரையறை செய்த பின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக புதிய அறிவிப்பாணை இன்று வெளிவரும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…