10 ஆம் பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வழங்கும் தேதி 18 இல் நடக்கும் ஆலோசனைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வழங்கும் தேதி 18 இல் நடக்கும் ஆலோசனைக்கு பின்னரே அறிவிக்கப்படும் என்று ஈரோடு அருகே கோபிசெட்டிபாளையம் நம்பியூர் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அந்த பகுதியிலேயே தேர்வு மையம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை ஜாக்டோ – ஜியோ புறக்கணித்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் ரிஸ்க் எடுத்து தேர்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதனிடையே, மாணவர்கள் நலன்கருதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அறிவிப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கவும் திட்டமிட்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…