முன்னதாக அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கின் காரணமாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடாமல் இருந்தது.ஆனால்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
குரூப் 2 தேர்வு :
இந்த சூழலில்,குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அறிவித்ததது. அதன்படி,கடந்த பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி,மே 21 ஆம் தேதி (சனிக்கிழமை) குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.மேலும்,ரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 23 ஆம் தேதி மாலையுடன் முடிவடைந்தது.
தவறான அறிவிப்பு:
இதனிடையே,குரூப் 4 தேர்வு குறித்த தவறான அறிவிப்பு ஆணை இணையத்தில் வேகமாக வைரலாகி வருவதாகவும்,இது தேர்வர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் எனவும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கேட்டுக் கொண்டது.
மேலும்,தேர்வாணையத்தின் அனைத்து அறிவிப்புகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்றும்,குரூப்-IV(குரூப் 4 தேர்வு)க்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.அதனை https://www.tnpsc.gov.in/ என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
குரூப் 4 தேர்வு எப்போது?:
10 வகுப்பு தேர்ச்சியைக் கொண்டு குரூப்-4 தேர்வில் வி.ஏ.ஓ உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படும் நிலையில்,நடப்பு ஆண்டு குரூப் – 4 தேர்வு எப்போது நடைபெறும் அரசுப் பணியை லட்சியாகக் கொண்ட ஏராளமான இளைஞர்கள் காத்திருகின்றனர்.
இந்நிலையில்,குரூப் – 4 தேதி இன்று (மார்ச் 29) மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.அதன்படி,தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் தேர்வு குறித்த அறிவிப்பை மாலை வெளியிட உள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…