3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்பொழுது ? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
சேப்பாக்கம் எம்எல்ஏ, திருவொற்றியூர் எம்எல்ஏ, குடியாத்தம் எம்எல்ஏ ஆகிய மூவரும் சமீபத்தில் காலமானார்கள். இதனை அடுத்து இந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் எப்போது என்ற எதிர்பார்ப்பு அந்த மூன்று தொகுதி மக்களிடம் இருந்த நிலையில், இந்த இடைத்தேர்தல் குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.