அதிமுக பொதுக்குழு கூட்டம் எப்பொழுது ? ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் இன்று ஆலோசனை
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் , இன்று மாலை 6.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி நேற்று முதல் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து சென்னையில் இன்று மாலை 6.30 மணிக்கு ஒருங்கிணைப்பாளரும் , துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.இந்த ஆலோசனையில் பிரச்சாரம், கூட்டணி பிரச்சனைகளுக்கு தீர்வு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.