பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றி முதல்வர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை.
தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றி முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் முதல்வர் ஆலோசித்து வருகிறார்.
இதனிடையே தமிழகத்தில் மே 31 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால், மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா மற்றும் 5-ம் கட்ட ஊரடங்கு குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் பொதுமுடக்கத்தை நீடித்தால் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம் என்றும் முதல்வர் கேட்டறிகிறார். ஏற்கெனவே மருத்துவ குழு பரிந்துரைப்படி, தமிழகத்தில் 4 முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.
குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…
சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…
குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…