தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவரது மறைவு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் இருந்து இன்று காலை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் பட பிடிப்பிற்காக நாகர்கோவில் சென்றிருந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது “விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு . அசாத்தியமான மன உறுதி கொண்ட ஒரு மனிதர் எப்படியும் உடல்நிலை தேறி வந்துவிடுவார் என எதிர்பார்த்தோம். சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழுவில் அவரை பார்க்கும் போது எனக்கு நம்பிக்கை கொஞ்சம் குறைந்தது.
அவர்கள் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார். அந்த பாக்கியத்தை மக்கள் இழந்துவிட்டனர். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என தெரிவித்தார்.
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…
சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர்.…
கிருஷ்ணகிரி :தமிழ்நாட்டில் இன்று (09-11-2024) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் மதியம் 1.30 மணியளவில்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer)…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவடைந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வு…